Wednesday, June 16, 2010

இயற்கையை பாதுகாப்போம்

பருவ மழை பருவம் தவறியும் பெய்வதில்லை

பருவ காற்று பருவமறிந்து வீசுவதில்லை

எக்காலமும் அக்காலத்தின் பயன் தருவதில்லை

எந்நிலமும் இயற்கையாய் விளைவதில்லை


நீர், நிலம், காற்று, வான் என இவ்வுலகை காக்க இயற்கை படைத்த படைப்பல்லாம் மனிதனின் தவறான வாழ்க்கை முறையால் தன் நிலை மாறி இவ்வுலகை அழிக்க தயாராகிக் கொண்டுள்ளது.தாயைப் பழித்தாலும் நீரை பழிக்காதே என்பார்கள். ஆனால் பூமியின் உள்மட்ட நீர்நிலையும் வற்றி, ஜீவநதிகள் எல்லாம் சாயநதிகளாகி புதிது புதிதாய் தோன்றும் நோய்களுக்கல்லாம் நீரின் மேல் பழி போடும் சூழல் உருவாகிவிட்டது.


கைப்பிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள், சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என சங்கீத மேடையாக இருந்த விவசாய நிலங்கள் எல்லாம் இன்று மருந்துகளின் நாற்றத்துடன் நஞ்சாகிவிட்டது.


மனிதனின் வாழ்க்கைக்கு எல்லா சவுகரியங்களையும் தேடித்தந்த அறிவியலின் வளர்ச்சி அதன் கழிவை காற்றில் கலந்து வாயு மண்டலம் வரை விஷவாயுவாக மாற்றிவிட்டது.


நாகரிக நகரை உருவாக்க காடுகள் அழிக்கப்பட்டதால் வானும் பூமியும் வெப்பமயமாகி நம் வாழ்வை அழித்துவிடுமோ என்ற அச்சம் மனிதகுலத்தை இன்று தோற்றிக்கொண்டது.


புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்ந்து பேரழிவை விரைவில் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளன.


நாம் எதிர் நோக்கியுள்ள பெரும் சவாலை இப்போதே உணர்வோம். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம்.


வாகன உபயோகத்தை குறைப்போம்.

ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்.

நீர்நிலைகளை பேணிக் காப்போம்.

சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்போம்.

மரங்கள் நிறைந்த பசுமையான இயற்கையை உருவாக்குவோம்.


மேட்டர் கொடுத்த நண்பருக்கு நன்றி..

9 comments:

kathir said...

மீ த ஃப்ர்ஸ்டு

கார்த்திக் said...

சரி இப்போ எதுக்காக இந்த போஸ்ட்டு
ஒரு மேட்டருக்காகவா :-))

க.பாலாசி said...

எல்லாம் சரிதானுங்க.. நீங்க சொல்றதுக்காகவே கேட்டுக்கணும்..

அகல்விளக்கு said...

நல்ல விசயம்....

நிச்சயம் முயற்சிப்போம்...

வால்பையன் said...

டிஸ்கவரி நீங்களும் பாக்குறிங்களா!?

க.பாலாசி said...

ஒருவழியா தமிழ்மணத்துலையும் சேர்ந்(த்)திட்டீங்க.... வாழ்த்துக்கள்...

ஜாபர் ஈரோடு said...

நன்றி நன்பர்களே...

சி. கருணாகரசு said...

நல்ல விடயங்கள்..... பாராட்டுக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் ஜாஃபர் - இயற்கை அழைகிறது இன்று. விளை நிலங்கள் அனைத்தும் வாழுமிடங்களாகி விட்டன். அசோகர் நட்ட மரங்களெல்லாம் காணாமல் போய் விட்டன். நீர் நிலைகள் - ஆறுகள் - நதி இவை எல்லாம் எங்கே ? என்ன செய்வது ...... நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் ஜாஃபர் - நட்புடன் சீனா

Post a Comment